ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது....முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது....முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அக் கட்சியின் 50 ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. 
அதில் அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்டம செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான சி. வி. சண்முகம் கலந்து கொண்டு எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடி ஏற்றினார்.

பின்னர் பேசிய அவர், தீய சக்தி கருணாநிதி அவர்களிடம் கணக்கு கேட்டதால் வெளியேற்றப்பட்ட எம் ஜி ஆர் தனியாக அதிமுக கட்சி ஆரம்பித்தார். அவருக்கு பின்னால் புரட்சி தலைவி அம்மா கட்சியை கட்டிகாத்தார்  அது இன்னால் வரை நாள் வரை தொடர்ந்து வருகிறது என்றார்.

ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்றும் உங்களால் ஆரம்பித்த அமமுக கட்சியை கூட காப்பாற்ற முடியவில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எத்தனை ஸ்டாலின், ஏன் கருணாநிதியே  மீண்டும் பிறந்து வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.