எல்லாம் சரியாகவே உள்ளது..... முன்னாள் அமைச்சருக்கு பதிலளித்த தேர்தல் ஆணையர்!!

எல்லாம் சரியாகவே உள்ளது..... முன்னாள் அமைச்சருக்கு பதிலளித்த தேர்தல் ஆணையர்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 பறக்கும் படையினர் குழு தீவிர கண்காணிப்பு  பணியை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதிமுக புகார்:

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் 5 வாக்குச்சாவடிகளை குறிப்பிட்டு புகார் சொல்லப்பட்டதாகும், ஆனால் அந்த ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அனைத்தும் சரியாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பணம்:

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 25 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், தினமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்றும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு பறக்கும் படையினர் மூன்று ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் தயாராக:

தொடர்ந்து பேசிய அவர், பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனடியாக அங்கு செல்லும் வகையில் பறக்கும் படையினர் தயாராக உள்ளதாக கூறிய அவர், பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்றும், தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அனுப்பி வைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஜெயலலிதாவின் ஆன்மா.... புகார் அளித்த முன்னாள் அமைச்சர்....