கல்லூரிகளில் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடைபெறாது? பொய்யான அறிக்கை என யுஜிசி விளக்கம்...

இனி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் பொய்யானது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 
கல்லூரிகளில் தேர்வுகள் இனி ஆன்லைனில்  நடைபெறாது? பொய்யான அறிக்கை என  யுஜிசி விளக்கம்...
Published on
Updated on
1 min read

யுஜிசி சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளி வந்தது.. அதில் இனி கொரோனா தொற்று குறைவால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனவும் ஆன்லைனில் இனி நடைபெறாது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து யுஜிசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது அது போலியான கடிதம் அதுபோன்ற கடிதத்தை யுஜிசி அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் மர்ம நபர்கள் யாரோ யுஜிசியின் கடிதத்தை போலவே வடிவமைத்து போலியான கடிதத்தை உருவாக்கி வெளியிட்டதாகவும் அது குறித்து  புகார் அளிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தர்பபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com