
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர் இருப்பு 23 புள்ளி 48 அடியாகவும், கொள்ளளவு 3 ஆயிரத்து 500 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெள்ள நீர் போக்கி வழியாக, விநாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.