சாலை சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு...!!

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு...!!

சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய  ஜி.எஸ்.டி சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட காரின் உரிமையாளர் சூரஜ் குமார் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறினார்.

அப்போது காரின் முன்புறத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. கரும்புகையைக் கண்டு கார் உரிமையாளர் சூரஜ் சுதாரித்துக்கொண்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீனம்பாக்கம் போலீசாரும், விமான நிறுவனம் நிலைய தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்   சமீப நாட்களாக சாலையில் செல்லும் வாகனங்களில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.