வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்த ஆசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு....

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஆசிரியர், வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்த ஆசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு....
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஆசிரியர் வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த போது  மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  சாப்பாடு சரியான நேரத்தில் வழங்கப்படாதததே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது .

மேலும்  மயக்கம்போட்டு விழுந்த ஆசிரியர் கொளப்பாக்கல் அரசு பள்ளி ஆசிரியைய் ஹேமா என்பதும் சர்க்கரை வியாதி உடைய அவர் காலதாமாக சாப்பிட்டும் சரியான நேரத்தில் மாத்திரை சாப்பிடாமல் இருந்தததே மயக்கத்திற்கு  காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மயங்கிய அவரை போலீசார் தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம்  குன்றத்துார்  மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்துள்ளனர் ..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com