கடந்த 2008-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் கிடைத்த வெடிபொருட்கள் : செயலிழக்க செய்யும் பணிகள் தீவிரம்…  

கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்காலையில் கிடைத்த வெடிபொருட்கள் மற்றும் குண்டுகளை திருத்தணி அருகே கல்குவாரியில் வைத்து ராணுவத்தினர் செயலிழக்கச் செய்து வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் கிடைத்த வெடிபொருட்கள் : செயலிழக்க செய்யும் பணிகள் தீவிரம்…   

கடந்த 2008-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சிப்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரும்பு உருக்கு ஆலையில் வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் இருப்பு உருக்கு ஆலைக்கு எடுத்து வந்த பழைய இரும்பு பொருட்களில் ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள் போன்றவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த நிலையில், அந்த வெடிகுண்டுகளை அதே பகுதியில் செயலிழக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த வெடிபொருட்களை வேறு இடத்திற்கு மாற்றி செயலிழக்க செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக திருத்தணி அடுத்த தமிழக எல்லையான எஸ்.கே.வி.கண்டிகையில் உள்ள கல்குவாரியில் வெடிபொருட்களை செயலிழக்க செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. சென்னையில் இருந்து வந்த ராணுவத்தினர் வெடிபொருட்கள் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  210 கையெறி வெடிகுண்டுகள், 40 ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட பல்வேறு வெடிபொருட்களை செயலிழக்க ராணுவத்தினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.