போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு... இதுவே கடைசி என எச்சரிக்கை...

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு... இதுவே கடைசி என எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பொது போக்குவரத்திற்கான சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலத்தை ஏற்கனவே அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியை போன்று, தழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை வலுத்தது. 

இதனை தொடர்ந்து, கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு வாகனத்தின் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதுவே கடைசி நீட்டிப்பு வழங்கலாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆணையிடப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com