மழைநீர் வடிகால் பணிகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு ...!

மழைநீர் வடிகால் பணிகளுக்கான  காலக்கெடு  நீட்டிப்பு ...!

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் பருவமழையின் போது பெய்த மழையினால் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 250 கோடி மதிப்பில் 71 கிமீ நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் புளியந்தோப்பு, அசோக் நகர், ராயப்பேட்டை, கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் 49 கி.மீ. நீளமுள்ள வடிகால் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தற்போது 80% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 15 ஆம் தேதிவரை வரையிலான காலக்கெடு தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மீதமுள்ள பணிகளை நீட்டிக்கப்பட்ட அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

முன்னுரிமை பணிகளை சிறப்புக் குழு கண்கானிக்கும், தாமதமாக பணிகளை மேற்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க    |  அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்க கடலில் உருவாக வாய்ப்பு...வானிலை மையம் கொடுத்த அப்டேட்!