
மருத்துவப் படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு வரும் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரிகளில் நர்சிங் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.