வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ...

வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ...
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  71 அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று 66 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிருநாளில் முழுக்கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே  தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அணையின் நீர் மட்ட உயர்வை பொறுத்து அடுத்தடுத்த கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும், முழு கொள்ளளவை எட்டும் நிலையில்,  அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஆண்டில் வைகை அணை 3வது தடவையாக நிரம்ப உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com