இந்த ஊர்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை…!

 நாளை முதல் தென் மேற்கு பருவமழை தீவிரமாவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழக உள் மாவட்டங்களிலும், மன்னார் வளைகுடா பகுதியிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தாலும், இன்று, நீலகிரி, கோவை, விழுப்புரம், உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால், நாளை முதல் வரும், 12ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வரும், 12ம் தேதி வரை கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.  நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதனால் மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்படக்கூடும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

குமரிக்கடல், தமிழக, ஆந்திரா கடற்பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு வரும், 12ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.