சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை... நேரில் சென்று தைரியம் ஊட்டிய அமைச்சர் நாசர்!

சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை... நேரில் சென்று தைரியம் ஊட்டிய அமைச்சர் நாசர்!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி டானியாவுக்கு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது.

முகச்சிதைவு நோய்:

சென்னையை அடுத்த ஆவடி வீராபுரம் ஸ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இந்த தம்பதிக்கு  டானியா என்ற 9 வயது மகள் உள்ளார். சிறுமி டான்யா, மிகஅரிய  வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு   ஒரு பக்க கண்ணம் முழுவதும்  சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவதால், இது குறித்த செய்தி ஊடகங்களில்  வெளியிடபட்டது.

உதவிய தமிழக அரசு:

இதனை அறிந்த மாண்புமிகு  தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்,  சிறுமி டானியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு மூலம்  செய்து தரப்படும் என கூறியிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Kallakurichi-student-case--successive-twists-and-turns-one-by-one-students-confession

அறுவை சிகிச்சை:

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால், சுமார் 9 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் வந்து டானியாவுக்கு தைரியம் ஊட்டி அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தார்.

அமைச்சர் நாசர்:

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், விளிம்பின் நுனியில் இருக்கின்ற ஏழைக் குழந்தையின் அந்த அழு குரலை கேட்டு தமிழக முதல்வர் அவர்கள் உடனுக்குடன் அந்த அழுகுரலை களைய வேண்டும் என்பதற்காக மருத்துவ சோதனையின் அடிப்படையில் சிதைந்து இருக்கின்ற முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குழந்தைக்கு செய்ய வேண்டி முகம் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்றைய தினம் தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்று கூறினார். மேலும், அந்த குழந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.