நுரை பொங்கி காட்சியளிக்கும் பாலாறு...நோய் ஏற்படும் அபாயம்...விவசாயிகள் கோரிக்கை!

நுரை பொங்கி காட்சியளிக்கும் பாலாறு...நோய் ஏற்படும் அபாயம்...விவசாயிகள் கோரிக்கை!

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவு நீர் கலந்து செல்வதால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள சில தொழிற்சாலைகள் தோல் கழிவு நீர்களை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், இரவு நேரத்தை பயன்படுத்தியும், மழையை பயன்படுத்தியும் பாலாற்றில் நேரடியாக கலந்து விடும்படி செய்கின்றனர். 

நுரை பொங்கி காட்சியளிக்கும் நீர்:

இதனால், மாராபட்டு பகுதியில் செல்லக்கூடிய பாலாற்று நீரில், தோல் கழிவுநீர் கலந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது. மேலும் இந்த கழிவு நீரானது, நிலத்தடி நீர் மற்றும் பாலாற்றிலிருந்து விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய நீர்களிலும், பாலாற்றிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய் நீர்களிலும் கழிவு நீர் கலந்து செல்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை:

இதேநிலை தொடர்ந்தால், கழிவு நீர் கலந்த நீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, கழிவுநீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.