
வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்பு உண்டு. நாய் நன்றியுள்ள பிராணி என்பதால் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் நாயை தங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதி மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.
அப்படி தான் பெற்ற பிள்ளையை போல் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ...மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்.சக்திவேல் இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். தாம் வளர்த்து வரும் சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை அடுத்து அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.
வீட்டில் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல சுஜி என்ற நாய்க்கு 5 விதமான உணவுப் பொருட்கள் செய்து கொடுத்து , புது சேலை மற்றும் மாலைகள் அணிவித்து நாயின் கால்களில் வளையல்கள் மாட்டி அதன் முகத்தில் சந்தனம் குங்குமம் வைத்து குடும்பத்தினருடன் சேர்ந்து வளைக்காப்பு நடத்தினார்.இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியமடைய வைத்ததுடன் விலங்குகள் ஆர்வலர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.