
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுகவினர் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும், லஞ்சம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
திமுகவினரின் இந்த முறைகேட்டை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருந்தாக குற்றம்சாட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.