மேள தாளங்கள் முழங்க ரஜினி படத்தை வரவேற்ற ரசிகர்கள்...இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

மேள தாளங்கள் முழங்க ரஜினி படத்தை வரவேற்ற ரசிகர்கள்...இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலக முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியது. முன்னதாக ரசிகர்கள் ரஜினியின் புகைப்படங்கள் நிறைந்த பேனர்களுக்கு மேளதாளங்களுடன் சென்று மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடி கொண்டாடினர். அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் வசந்த் ரவி, நடிகை மிர்னா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர். அப்போது அனிருத் ரசிகர்கள் மத்தியில் ஹூக்கும் பாடலை பாடினார்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அதேபோல மேல தாளங்கள் முழங்க பெண் ரசிகர்கள் உற்சாக நடனமாடி படத்தை வரவேற்றனர்.

இதையும் படிக்க : சிறுமியை சகட்டுமேணிக்கு தாக்கிய மாடு... வைரலான வீடியோ...உரிமையாளர் மீது வழக்கு!

திருச்சியில் ஜெயிலர் திரைப்படம்  10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சோனா- மீனா திரையரங்கு முன்பாக ரஜினியின் ரசிகர்கள்  மேளதாளம் அடித்து, உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர்.

ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரியில் அனைத்து திரையரங்கிலும் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக திருவள்ளுவர் சாலையில் உள்ள சண்முகா திரையரங்கில் படத்தை வரவேற்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் ஜெயிலர் திரைப்படம் கோலாகலமாக வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரும், கர்நாடகாவின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் கர்நாடகா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.