எதிர்ப்பு பயம் - நிலக்கரி சுரங்கம் கைவிட்டிருக்கிறது மத்திய அரசு - திருமுருகன் காந்தி

எதிர்ப்பு பயம் - நிலக்கரி சுரங்கம் கைவிட்டிருக்கிறது மத்திய அரசு - திருமுருகன் காந்தி

 இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னை தி.நகர் பெரியார் சிலை முன்பாக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக போலீசார் அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது

Activist Thirumurugan Gandhi Released on Bail After 53 Days in Tamil Nadu  Prison

ஊருவிளைவிக்கும் திட்டம் - மத்திய அரசின் வசம்


தமிழ்நாட்டு நலனுக்கும் தமிழர் நலனுக்கும் ஊரு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்காக (NLC) 12,500 ஏக்கர் நிலம் பறிபோகிறது. காவேரி டெல்டாவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தமிழர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டின் மீனவர்கள்  இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.

மேலும் படிக்க | அதுக்குன்னு இப்படியா பேசுறது...ஆளுநர் ஐயா?.

இந்திய அரசு ஆயுத ஒப்பந்தம்

இது போன்ற ஒரு மோசமான உறவை இலங்கை தமிழ்நாட்டின் மீது காட்டிக் கொண்டிருக்கிறது ஆனால் இலங்கை அரசுடன் இந்திய அரசு ஆயுத ஒப்பந்தம்  செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது . நீட் தேர்வை கொண்டு வந்து தமிழ் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கின்றனர்.

ஆளுநரை திரும்ப பெரும் வேலையை இதுவரையில் மத்திய அரசு செய்யவில்லை

அதேபோல  ஆளுநர் என்ற பதவியை வைத்துக்கொண்டு  மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர்.இந்த ஆளுநரை திரும்ப பெரும் வேலையை இதுவரையில் மத்திய அரசு செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வரலாற்று கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசி வருகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை மக்களிடம் இருக்கும் நேசத்தை சிதைக்கும்

ராம நவமியின் போது இஸ்லாமியர்கள் மீதும் அவர்களது வழிபாட்டு தலங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது இதுபோன்று இந்தியாவின் ஒற்றுமையை மக்களிடம் இருக்கும் நேசத்தை சிதைக்கும் வகையில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  இது போன்ற ஒருவர் தமிழகத்திற்கு வர வேண்டாம் என்று கூறி இன்று இந்த கருப்பு கொடி ஆர்பாட்டத்தை நடத்தி வருகிறோம்.

மேலும் படிக்க | லிட்டர் ரூ 5000க்கு விற்பனையாகும் கழுதை பால்

மோடி என்பவர் தமிழ்நாட்டுக்கு விரோதமானவர்

மோடி என்பவர் தமிழ்நாட்டுக்கு விரோதமானவர் பாஜக தமிழர்களுக்கு விரோதமான கட்சி தமிழகத்தை இழிவு படுத்துகின்ற கட்சி என்று கூறினார்  மேலும் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளதை பற்றிய கேள்விக்கு  தமிழ்நாட்டில் எதிர்ப்பை கண்டு அஞ்சி மோடி அரசு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதேபோன்று என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையும் கைவிட வைப்போம் என்று கூறினார்.