
சேலம் மாவட்டம் ஓமலூாில் செய்தியாளா்களிடம் பேசிய எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி,
நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுக-வினா் தேல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளனா் என்றார். மேலும் திமுக-வினா் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கூட காவல்துறையினா் தடுத்து நிறுத்தவில்லை எனவும் தி.மு.க வேட்பாளரின் கணவர் ஒருவர் போலீசாரை மிரட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள், அச்சமின்றி வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினா்.