தவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர் பணி இடைநீக்கம்...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, செவிலியரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 100 அடி ஆழத்திற்கு நிலம் திடீரென உள் வாங்கியதால் கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
கூடலூர் அடுத்த அத்திக்குன்னா மட்டத்துப்பாடி என்னும் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த வெள்ளிக் கிழமை 30 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் முகமது குமரத்துல்லா தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியில் மூடப்பட்ட கிணறு காரணமாக நிலம் உள்வாங்கி இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே நிலம் உள் வாங்கிய அதே பகுதியில், சுமார் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து, இந்த பகுதியில் வசித்து வந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
இதையும் படிக்க || காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்குவதற்கு கர்நாடக மக்கள் எதிர்ப்பு!!
சென்னையில் இரு வெவ்வேறு இடங்களில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று இரவு மெரினா போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராகுல் மகரனா(18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் ஆட்டோ மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரி சிவாவிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ராகுல் உட்பட இருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று மாலை அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் இருந்து இறங்கி வந்த வாலிபரை பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்த நாராயணா டோலி(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!
மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், இறக்கும்முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு படையெடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகேயுள்ள சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோயில் மூலவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காலை முதலே வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள 13 ஆவது திவ்ய தேசமான உப்பிலியப்பன் திருக்கோயில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நிகழ்த்தப்பட்டது.
இதேபோல், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நான்காம் மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் பூத நாராயணருக்கு அரிசி, மாவு, கதம்பம், பன்னிர்,பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பெருவாரியான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இதையும் படிக்க : ’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!
பூலோக வைகுந்தம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அதிகாலை முதலே புரட்டாசி பூஜைகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டிச் செல்கின்றனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சத்தியநாராயணன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் குவிந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டுச் செல்கின்றனர்.
ஈரோட்டில் வழிபாடு நடத்திய கிருத்தவ குடும்பத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர்.
ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்திருக்கின்றனர். ஜெபம் முடிந்து ஆறு பேர் வெளியில் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை அந்தக் கும்பல் நடத்தி உள்ளது.
இந்நிலையில் இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், "கிறித்துவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களைக் கொலை வெறிக் கொண்டு தாக்கியக் கும்பல், இந்து முன்னணியினர் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவர் தன் வீட்டில் மத வழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
மதவெறிக் கூட்டத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் மதவெறி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிறித்துவ மத வழிபாட்டில் தலையிட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:"திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்