கழிவறை இல்லா பெண் காவலர்கள்.....பிரச்சினைக்கு தீர்வு எப்போது?!!!

கழிவறை இல்லா பெண் காவலர்கள்.....பிரச்சினைக்கு தீர்வு எப்போது?!!!

வருகின்ற பெண்கள் தினத்தன்று பெண் காவலர்களுக்கு காவலர் விடுதி கட்டித் தருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விண்ணப்பம்.

ஆனந்தம் முகாம்:

சென்னை காவல்துறையின் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு போக்குவரத்து பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர் முதல் பெண் ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்படுவதற்காக ஆனந்தம் என்கிற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

பயிற்சியின் நோக்கம்:

இந்தப் பயிற்சி முகாமில் தன்னம்பிக்கை எப்படி வளர்த்துக் கொள்வது சுயமரியாதையுடன் இருப்பது உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது பணிச்சுமைகளை கடந்து செல்வது உள்ளிட்டவை பற்றி எல்லாம் பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்டது.  இந்த பயிற்சி வகுப்பில் 2216 பெண் காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

இரண்டாம் ஆண்டு:

இந்த நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும் இரண்டாவது கட்டமாக ஆனந்தம் துவக்க விழாவினை துவங்குவதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூடுதல் ஆணையர் லோகநாதன்,  இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் பெண் காவலர்கள் 2715 பேர்  கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வு சென்னை வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்:

ஆனந்தம் பொறுத்தவரை நான் அதிகமாக பேச தேவையில்லை.  ஏனென்றால் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி 100 சதவீதம் சரியாக வழிநடத்தி வருகிறார்.  காவலர்கள் என்னிடம் அவர்களுடைய பிறந்தநாள் அன்று வரும்பொழுதும் புகைப்படம் எடுக்க வரும் பொழுதும் நான் அதிகமாக கேட்பது உங்களுடைய வருமானத்தை என்ன செய்கிறீர்கள் என்பதே.  அவர்களில் ஒரு சில காவலர்கள் அவர்களுடைய வீட்டிற்கும் கடன் பிரச்சினைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள்.  ஆனால் ஒரு சில காவலரிடம் எந்தவிதமான பதிலும் இருக்காது குறைவான சம்பளத்தை வைத்து எப்படி சேமிப்பு வைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆனந்தத்தில் சேர்க்க வேண்டும் ஏற்கனவே ஆனந்தம் என்ற தலைப்பில் இந்த செயல் இருக்கிறது. 

பணப்பற்றாக்குறை:

இருப்பினும் பண பற்றாக்குறையை எப்படி பூர்த்தி செய்வது என்று நிச்சயம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏற்கனவே ஆனந்தம் தலைப்பில் பலவிதமான தயாரிப்புகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண் காவலர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னையில் பணியாற்றி வருகிறார்கள்.

முதலமைச்சரிடம் கோரிக்கை:

அவர்களுடைய தங்கும் வசதி ஏற்பாடு செய்வதற்காக வருகின்ற பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.  அதில் பெண் காவலர்களுக்கான விடுதி கட்டித் தருவதற்கு விண்ணப்பம் வைக்க இருக்கின்றோம்.  இதில் வாடகை பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.   இதனுடன் விளையாட்டுப் போட்டிகளில் பெண் காவலர்கள் திறம்பட செயல்பட்டு வருகிறார்கள்.  

முறையான பயிற்சியாளர்கள்:

ஆனால் அவர்களுக்கான பயிற்சியாளர்கள் முறையாக இல்லை என தெரிகிறது.  மாநில அளவில் மட்டும்தான் பயிற்சியாளர்கள் திறம்பட செயல்படுகிறார்கள்.  தேசிய அளவில் பயிற்சியாளர்கள் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.  இறுதியாக எல்லார் வீட்டிலும் இருப்பது போலவே என்னுடைய வீட்டில் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்.  75% அவர்கள் தான் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள்.

பாரதி பாஸ்கர்:

அதனைத் தொடர்ந்து பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மேடையில் பேசிய போது நான் தற்பொழுது ஜாலியாக தான் பேச வந்துள்ளேன்.  இவ்வளவு காவல் துறையினரின் நடுவில் நான் இதுவரை இருந்ததே கிடையாது.  இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் போது ஐந்து நிமிடங்கள் எனக்கு ஒதுக்கி இருந்தார்கள்.  நான் பட்டிமன்றத்திலேயே 15 நிமிடம் வரை பேசுவேன் எனக்கு ஐந்து நிமிடம் தானா என கேள்வி எழுப்பினேன்.  மேலும் வரக்கூடிய காவல் அதிகாரிகளுக்கு வரும்பொழுது ஒரு சல்யூட் நிற்கும் பொழுது ஒரு சல்யூட் போகும்போது ஒரு சல்யூட் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை யாருக்கு சல்யூட் அடிப்பது என்று கூட தெரியவில்லை. 

தேவையானதை மட்டும்:

இந்த இடத்தில் எனக்கு பிடித்தது காவல் ஆணையர் உடைய பேச்சு இரண்டு நிமிடம் பேசினாலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசி விட்டு சென்றிருக்கிறார்.  தலைமை என்றால் இதுதான் தலைமை எங்களைப் போல் வள வள என்று பேசாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

கணவர்களும்...:

ஆனந்தம் நிகழ்ச்சியில் கணவர்மார்களும் நிச்சயம் பங்கு பெற வேண்டும்.  ஏனென்றால் அவர்களும் குடும்ப சுமையை சுமக்க வேண்டும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் காவல்துறையில் இருக்கின்ற நீங்கள் செய்யாவிட்டால் மற்ற யார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

பிடித்த கதாபாத்திரம்:

காவல்துறையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் ஒரு படத்தில் வடிவேலு பெண் காவலரை பார்த்து கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா என பாட்டு பாடுவார்.  உடனடியாக அந்த பெண் காவலர்கள் பாட்டு பாடிக்கொண்டே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அந்த காட்சி மிகவும் எனக்கு பிடித்த காட்சி.

கழிவறை:

குறிப்பாக பெண்கள் பந்த போஸ்ட் செல்லும் பொழுது 10 மணி நேரம் 15 மணி நேரம் நிற்கின்றார்கள்.  அனைத்து துறைகளிலும் கழிவறை உள்ளது.  ஆனால் பெண் காவலருக்கு இதுபோன்ற துயரங்கள் தான் உள்ளது.

எட்டு மணி நேரம் அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்து பணியாற்றும் நபர்கள் எவ்வளவு துயரங்கள் என்று புலம்பும் நேரத்தில் 18 மணி நேரம் காவலர்கள் நின்று பணியாற்றுகிறார்கள்.  அவர்களுடைய துயரங்கள் மற்ற யாருக்கும் தெரிவதில்லை.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”நான் மறைந்த ஜெயலலிதாவின் சகோதரன்.... எனது தந்தையின் இரண்டாவது மனைவியே.....” வழக்கு தொடர்ந்த வாசுதேவன்!!!