'தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி உதவி' - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

'தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி உதவி' -  அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!
Published on
Updated on
1 min read

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ உரிய முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் கொரோனா சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இன்றி அவதிப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததாக கூறினார்.

எனவே ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபோல, முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் நிதி உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com