கோவை அரசு மருத்துவமனையில் தீடீர் தீ விபத்து... 

கோவை அரசு மருத்துவமனை பிணவறை அருகே நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 இலவச அமரர் ஊர்திகள் எரிந்து சாம்பலாகின.
கோவை அரசு மருத்துவமனையில் தீடீர் தீ விபத்து... 
Published on
Updated on
1 min read

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான அமரர் ஊர்திகள் நிறுத்தப்பட்டு இருப்பது வழக்கம். இந் நிலையில் நேற்று இரவு திடீரென இலவச அமரர் ஊர்திகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

இதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  பிணவறை அருகே இரவில் ஆட்கள் யாரும் இல்லாததால் இந்த விபத்தில்  ஏற்படவில்லை. அதேசமயம் தீ நீண்ட நேரம் இருந்ததால் இரண்டு அவர்கள் ஊர்திகளும் தீயில் கருகி சாம்பலாகின.

கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து அவ்வப்போது தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com