பஞ்சு குடோனில் தீ விபத்து...ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திண்டுக்கல் அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

பஞ்சு குடோனில் தீ விபத்து...ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திண்டுக்கல் மாவட்டம் அடுத்த ஒய் .எம் .ஆர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரே உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை குடோனுக்கு வந்த காவலாளி பரமன்.  குடோனின்  பின்புறமாக இருந்த ஷட்டர் வழியாக கரும்புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உரிமையாளர் ஜெயசீலனுக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குடோனின் உள்ளே அடுக்க வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்களில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட இயந்திரங்கள் எரிந்து நாசமானது. மேலும் இது தொடர்பாக  தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.