முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன்....!!!

முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன்....!!!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கவுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்நாடு குறித்து சர்ச்சையாக பேசிய  ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.  அதற்கு, வருகின்ற மாமன்றக் கூட்டம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா அப்போது அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மன்றக்கூட்டம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!!