குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் செல்ல தடை.. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் செல்ல தடை.. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுதம்:

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் நிலுவையில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதற்க்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

பலத்த காற்றுடன் கனமழை:

இந்த நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தம்:

இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி  தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு:

மீன்பிடி தடை காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மூன்று நாட்களுக்கு உள்ளதால் வரும் வியாழன் முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.