சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவுள்ள மீனவர்கள்...!

Published on

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிடவுள்ளனா். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்களையும், 5 படகுகளையும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனா். 

இந்நிகழ்வு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோாி, ராமேஸ்வரம் மீனவா்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். 

இந்நிலையில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் மீனவர்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com