சென்னை புறநகரில் கொட்டிய மழையால் 13 பன்னாட்டு விமானங்கள் உள்பட 65 விமானங்கள் தாமதம்

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 13பன்னாட்டு விமானங்கள் உள்பட 65 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை புறநகரில்  கொட்டிய மழையால் 13 பன்னாட்டு விமானங்கள் உள்பட 65 விமானங்கள் தாமதம்
Published on: 
Updated on: 
1 min read

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில்  தொடா்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவா, அந்தமான் உள்பட 52 விமானங்கள் 10 நிமிடங்களில் இருந்து 35 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.  

அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, குவைத், சார்ஜா, கத்தார், துபாய், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 13 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை  தாமதமாகி புறப்பட்டு சென்றன. ஆனால் சென்னைக்கு வந்த விமானங்களில் எந்தவித தாமதமின்றி தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com