கனமழை எதிரொலி; பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

கனமழை எதிரொலி; பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
Published on
Updated on
1 min read

நள்ளிரவில் முதல் பெய்த  கனமழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல்  3  விமானங்கள் பெங்களூர் திருப்பி விடப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. 

டெல்லியில் இருந்து 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு  வந்த விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதை போல் ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் வந்த  விமானமும், அதிகாலை கொல்கத்தாவில் இருந்து 167 பயணிகளுடன் வந்த விமானமும் தரை இறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி அனுப்பபட்டது. 

மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான  பாங்காக், ஃபிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய 3  விமானங்கள்,  தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.  மேலும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் 2 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகள் அனைவரும் வெளியேறினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com