குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!!

குற்றாலம் அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கி உள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளின் தண்ணீர் ஆர்பரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை தடை நீக்கப்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகம்  தடை விதித்து உத்தரவு 

இந்நிலையில் தென்காசி பகுதிகளில் திடீர் கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் நீர் வரத்து சீராக இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிற்பகல் 2 மணி முதல் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் குற்றாலத்தில் குளிப்பதற்காக வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.