புலிகள் இறப்பு குறித்து தொடா் ஆய்வு - அமைச்சா் மதிவேந்தன்!

புலிகள் இறப்பு குறித்து தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் மதிவேந்தன் தொிவித்துள்ளாா். 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாகன வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்,  செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!

அப்போது பேசிய அவர், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது குறித்து உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

மேலும் புலிகளின் இறப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், வனத்துறை அதிகாரிகளின் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.