பா.ம.க-வை தொடர்ந்து தேமுதிகவும் தனித்து போட்டி!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் தற்போது தேமுதிகவும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பா.ம.க-வை தொடர்ந்து தேமுதிகவும் தனித்து போட்டி!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தல் தொடர்பாக  9 மாட்டம் நிர்வாகிகளுடன் பாமக  நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

இதில் கட்சியின் வளர்ச்சியைக் கருதி, உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.  இதுதொடர்பாக, பாமக தலைவர் ஜி,கே.மணி வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். 9 மாவட்ட நிர்வாகிகளின்  விருப்பதற்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தொடர்வ தொடர்வதாகவும் தற்போது நடைபெற உள்ள 9 மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்க வேண்டும் என அந்தந்த மாவட்ட பாமக நிர்வாகிகள் தலைமையை வலியுறுத்தியதாகவும். நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த தேர்தலில் மட்டும் தனித்து நிற்பதாகவும் ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் பாமக தலைவர் ஜி.கே மணி தகவல் தெரிவித்தார்.

மேலும், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து, இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நாளையும்,  நாளை மறுநாளும்  விருப்பம் மனு  பெறப்படும் எனவும் தேமுதிக அறிவித்துள்ளது.