இந்தியாவின் எதிர்காலத்திற்காக...! சமதர்மத்தை ஏற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்...!! முதலமைச்சர் கோரிக்கை...!!!

இந்தியாவின் எதிர்காலத்திற்காக...! சமதர்மத்தை ஏற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்...!! முதலமைச்சர் கோரிக்கை...!!!

நாட்டின் நன்மைக்காக, சமூக நீதி, சகோதரத்துவம் மற்றும் சமதர்மத்தை ஏற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் திமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இஃப்தார் விருந்தை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக அபு பக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா, வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், அது வெறும் தேர்தலுக்காக மட்டும் அல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்திற்காக ஏற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிடக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், நாட்டை காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய 3 கருத்தியலுக்கு உள்ளதாகவும் கூறினார். மேலும், சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்கள், கோரிக்கைகள் வைக்காமலேயே திமுக ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.