" எதிரணி என்று சொல்லும் அளவுக்கு கூட ஓபிஎஸ் அணியில் ஆட்கள் இல்லை.." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

" எதிரணி என்று சொல்லும் அளவுக்கு கூட ஓபிஎஸ் அணியில் ஆட்கள் இல்லை.." - முன்னாள்  அமைச்சர்  ஜெயக்குமார்

ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளனர், நாலு ஆணி ஒரு கோனி வைத்துள்ளவர்கள் தான் ஓபிஎஸ் தரப்பினர் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுடன்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக குறித்து விமர்சனம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கண்டனம் தெரிவித்தார். 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பொறுப்பே இல்லை என்றும் அந்த பொறுப்பு காலாவதி ஆகிவிட்டது என்றும் பொதுக்குழுவில் ஏக மனதாக எடப்பாடி கே பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தலைமையில் தான் அதிமுக இயங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எதிரணி என்று சொல்லும் அளவுக்கு கூட ஓபிஎஸ் அணியில் ஆட்கள் இல்லை.

நாலு ஆணி ஒரு கோணி வைத்து குழு நடத்துபவர் ஓபிஎஸ் என தெரிவித்த அவர், ஓபிஎஸ் போலியான அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது அநாகரிகமான செயல் அந்த செயலை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஓடுக்கி அதை யார் செய்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 2024 ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வருமா என மக்களும் அரசு அலுவலர்களும் எண்ணத்தொடங்கி விட்டனர் எனவும் கூறினார்.
 
மேலும் படிக்க : அன்புமணியின் சர்ச்சை பேச்சு...ஏறி வந்த பாதையை மறக்க கூடாது...பாமகவை எச்சரித்த ஜெயக்குமார்!