முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான வழக்கு ரத்து!!

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான வழக்கு ரத்து!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போரட்டத்தில் ஈடுபட்டதற்காக, திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இவற்றில் கலந்துகொண்டு போராடியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக எம்எல்ஏ கார்த்திக் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, மூவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || "தமிழக இளைஞர்களை ஏமாற்றும் ஊழல் அரசு, திமுக" அண்ணாமலை விமர்சனம்!!