ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்...!

ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்...!

மக்களுக்கு சேவையாற்றும் இலக்கை எனக்கு நானே வைத்துக்கொண்டு, அந்த இலக்கை அடையவே உழைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல் உட்பட 7 திட்டங்களை தொடங்கி வைத்தார்.  

இதையும் படிக்க : ஈரோடு இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 55 ஆண்டு காலம் அரசியலே எனது வாழ்க்கையாக இருந்து வருவதாகவும், அரசியலை கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் அண்ணா, கலைஞர் எனவும் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தினந்தோறும் திட்டங்களை தீட்டுவதே தனது பணி எனவும், பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.