கரும்பு டன் ஓன்றுக்கு நான்கு ஆயிரம் ரூபாயாக.... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

கரும்பு டன் ஓன்றுக்கு நான்கு ஆயிரம் ரூபாயாக.... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

கரும்புக்கு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான பதிலுரையில் பேசிய அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், உணவு தானிய உற்பத்தி 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையாக குருவை நெல் சாகுபடி 5 லட்சத்து  33 ஆயிரம் ஏக்கர் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், கரும்பு சாகுபடி பரப்பு 55 ஆயிரம் ஹெக்டர் அதிகரித்து இருப்பாதவும் தெரிவித்தார். 

இந்த பட்ஜெட்டில் கரும்பு டன் ஓன்றுக்கு 195 ரூபாய் உயர்த்தப்பட்டு 3 ஆயிரத்து 10 ரூபாயாக வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று ஆண்டில் திமுக அளித்த வாக்குறுதி படி கரும்பு டன் ஓன்றுக்கு நான்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

இதையும் படிக்க:  பண்ருட்டி தொகுதியில் வேளாண்மை கல்லூரி விரைவில்...!!