விநாயகர் சதுர்த்தி: பின்பற்ற வேண்டிய  நெறிமுறைகள் வெளியீடு!  

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய  வழிகாட்டுதல் நெறிமுறைகளை  சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. 

விநாயகர் சதுர்த்தி: பின்பற்ற வேண்டிய  நெறிமுறைகள் வெளியீடு!   

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய  வழிகாட்டுதல் நெறிமுறைகளை  சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனி நபர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்கள் வாங்கிச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.