தடை உத்தரவை மீறி வழிபட கொண்டு சென்ற விநாயகர் சிலைகள் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தடை உத்தரவை மீறி வழிபட கொண்டு சென்ற விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 
தடை உத்தரவை மீறி வழிபட கொண்டு சென்ற விநாயகர் சிலைகள் பறிமுதல்
Published on
Updated on
1 min read

கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடத்தில் சிலை வழிபாடு, ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஒவ்வொரு பகுதிகளிலும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் சம்பங்கள் நடக்காது என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பாறை, வாய்க்கால்பாறை, பொன்நகர் கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசின் தடை உத்தரவையும் மீறி 8 அடி, 7 அடி மற்றும் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடமலைக்குண்டு போலீசார் அந்த சிலைகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் போலீசாரிடம் விநாயகர் சிலைகளை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் அங்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் 4 அடி உயரம் கொண்ட சிலை மட்டும் மக்களிடம் வழங்கப்பட்டது. அந்த சிலையையும் பொது இடத்தில் வைக்காமல் வீடுகளில் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com