சிலிண்டர் குடோன் வெடித்த விபத்தில்...அடுத்தடுத்து உயிர்பலியாகும் அவலம்...!

சிலிண்டர் குடோன் வெடித்த விபத்தில்...அடுத்தடுத்து உயிர்பலியாகும் அவலம்...!

கேஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது. 

சிலிண்டர் வெடித்து விபத்து:

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கேஸ் சிலிண்டர் குடோன் செயல்பட்டு வந்தது. இங்கு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலை திடீரென  சிலிண்டர்கள் வெடித்து விபத்துகுள்ளானது.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை:

இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில், 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 7 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்... ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை:

இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணால், கிருஷ்ணன் என்பவர்கள் இன்று காலை  இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஏற்கனவே குடோனின் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் சந்தியா மற்றும் பூஜா ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.