அடுத்த படத்திற்கு விளம்பரமா சூர்யா... நீங்க பேசாம திமுக வேட்டி கட்டிகலாம்... காயத்ரி ரகுராம் காட்டம்

நீட் தேர்வு பற்றி சூர்யா நிஜத்தை தான் பேசுகிறாரா? இல்லை, யாரோ எழுதி கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா?என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

அடுத்த படத்திற்கு விளம்பரமா சூர்யா... நீங்க பேசாம திமுக வேட்டி கட்டிகலாம்... காயத்ரி ரகுராம் காட்டம்

திமுக தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார் என்றும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் திமுகவின் கரை வேட்டிக் கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு பற்றி சூர்யா நிஜத்தை தான் பேசுகிறாரா? இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா?" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்..

இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வே இல்லாமல் செய்வோம்" என்று தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

இப்போது அரசின் செயல்பாடுகள் வேறுவிதமாக உள்ளதால், இது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என மாறி மாறி எழுந்த வண்ணம் உள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகர் சூர்யாவின் அறிக்கை முக்கியத்துவம் பெற்றது."டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த, ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில், நீட் நுழைவு தேர்வு வாயிலாக தீ வைக்கப்பட்டது... அது ஏற்படுத்திய காயத்தின் வடு, காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு ஆபத்தானது" என்று அறிக்கை விட்டு தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கை மேலும் அனலை ஏற்படுத்தியது.. பாஜகவினர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், அக்கட்சியின் கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமும் சூர்யாவை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அடுத்தடுத்த ட்வீட்களை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக நீதிக்கு எதிரானது என்று நீட் தேர்வு பற்றி சொல்கிறாரே, உண்மையிலேயே இவர் நிஜத்தை தெரிந்து கொண்டுதான் பேசுகிறாரா, இல்லை, யாராவது எழுதி கொடுத்ததை அப்படியே அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா? 

திமுகதான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் இப்படி தடுமாறினால், சூர்யாவும் அதற்கு முட்டுக்கொடுக்க வந்து விடுகிறார்... இதுக்கு சூர்யா குடும்பத்தினர், இனிமேல், திமுக கரை வேட்டி கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.  

நீட் தேர்வை என்னவோ சினிமா ஷூட்டிங் நடத்துவது போல சூர்யா நினைத்துகொண்டிருக்கிறார். அந்த மாயையில் இருந்து அவர் விடுபட வேண்டும்...

நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், சூர்யா வீட்டுக்கு சென்று, நீட் தேர்வு குறித்து வகுப்பு எடுக்கும் சூழல் உருவாகும். அதற்கு ஏற்பாடு செய்யப்படும்... சூர்யாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர்.

 அங்கு சென்று நீட் தேர்வு ஆபத்து என்று குரல் கொடுப்பாரா சூர்யா? பொய் தகவல்களை சொல்லி, தமிழக மாணவர்கள் வாழ்க்கையில் சூர்யா விளையாடக்கூடாது... மீறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.