புவிசார் குறியீடு... தமிழ்நாடு முதலிடம்!

புவிசார் குறியீடு... தமிழ்நாடு முதலிடம்!

உணவுப் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது  மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி , சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நெகமம் பருத்தி, மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல்சிற்பம், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, தைக்கால் பிரம்பு ஊஞ்சல் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  

இதனால் இந்தியாவிலேயே 56 புவிசார் குறியீடுகளை பெற்று தற்போது தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதுவரை புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்

  1. சேலம் சுங்கடி
  2. காஞ்சிப்பட்டு
  3. பவானி ஜமக்காளம்
  4. மதுரை சுங்குடி சேலை
  5. கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி
  6. தஞ்சாவூர் ஓவியம்
  7. தஞ்சாவூர் ஓவியத்தட்டு
  8. சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்
  9. நாச்சியார் கோயில் விளக்கு
  10. ஆரணிப் பட்டு
  11. கோவை கோரா பருத்திப் புடவை
  12. சேலத்துப் பட்டு
  13. கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
  14. தலையாட்டி பொம்மை
  15. ஈத்தாமொழி நெட்டை தென்னை
  16. யூகலிப்டசு தைலம்
  17. யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது)
  18. விருப்பாச்சி வாழை
  19. சிறுமலை மலை வாழைப்பழம்
  20. தோடா பூந்தையல்
  21. பத்தமடைபாய்
  22. நாச்சியார் கோயில் விளக்கு
  23. செட்டிநாடு கொட்டான்
  24. தஞ்சாவூர் வீணை
  25. ஈரோடு மஞ்சள்
  26. மதுரை மல்லி
  27. திருவில்லிபுத்தூர் பால்கோவா
  28. மகாபலிபுரம் கற்சிற்பம்
  29. தஞ்சாவூர் தட்டு (இலட்சினை)
  30. சுவாமிமலை வெண்கலச் சிலை
  31. கோயில் நகை-நாகர்கோயில் (இலச்சினை)
  32. பழநி பஞ்சாமிர்தம்
  33. சீரக சம்பா அரிசி
  34. பத்தமடை பாய்
  35. பழநி பஞ்சாமிர்தம்
  36. கொடைக்கானல் மலைப்பூண்டு
  37. சீரக சம்பா
  38. பத்தமடை பாய்
  39. கோவில்பட்டி கடலை மிட்டாய்
  40. அரும்பாவூர் மர வேலைப்பாடுகள்
  41. நரசிங்கம்பேட்டை நாகசுரம்
  42. வேலூர் முள்ளு கத்தரிக்காய்
  43. ராமநாதபுரம் குண்டு மிளகாய்
  44. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு
  45. கன்னியாகுமரி கிராம்பு
  46. மணப்பாறை முறுக்கு 
  47. மார்த்தாண்டம் தேன் 
  48. மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு
  49. ஆத்தூர் வெற்றிலை
  50. கம்பம் பன்னீர் திராட்சை
  51. சோழவந்தான் வெற்றிலை
  52. நகமம் காட்டன் சேலை
  53. மயிலாடி கல் சிற்பம்
  54. சேலம் ஜவ்வரிசி
  55. மானாமதுரை மண்பாண்டம் 
  56. ஊட்டி வர்க்கி