காதலியுடன் பலமுறை தனிமையில் இருந்த காதலன்…. வேறு ஒரு பெண்ணை  கரம்பிடிக்க முயன்றதால் காதலன் மீது புகார் அளித்த காதலி!

தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் தனது காதலனை மீட்டு தருமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை அடுத்த கோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் சுகன்யா சென்னையில உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், பாபநாசத்தை சேர்ந்த விஜய் என்பவரை கல்லூரி படித்த போதிலிருந்து காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் தங்களது காதலை வளர்க்க,  விடுமுறை நாட்களில் சுகன்யாவின் வீட்டிற்கு விஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சுகன்யாவுடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சுகன்யாவை திருமணம் செய்துகொள்வதாக கூறி திருச்சி வரவழைத்துள்ளார் காதலன் விஜய். ஆனால் அவர் வெகுநேரம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து சுகன்யா, நடந்த சம்பவம் குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுகன்யாவின் காதலன் விஜயுக்கு, வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, வருகிற 14-ந் தேதி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா, உடனடியாக தனது காதலனின் திருமணத்தை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்.