மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு... கல்லூரி மாணவர்கள்களுக்கு போலீசார் வலைவீச்சு...

புழல் அருகே மாநகர பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு... கல்லூரி மாணவர்கள்களுக்கு போலீசார் வலைவீச்சு...
Published on
Updated on
1 min read

செங்குன்றத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில்  தடம் எண் 114 என்ற  மாநகர பேருந்து கோயம்பேடுக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இதனை அண்ணாநகர் மேற்கு பணிமனையை சேர்ந்த சுயாட்சி என்ற ஓட்டுனர் இயக்கினார்.நடத்துனராக சிவா என்பவர் இருந்தார். பஸ் செங்குன்றத்தில் இருந்து புழல் கேம்ப் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து மாதவரம் நோக்கி சென்ற போது அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறினார்கள்  அவர்களை படிக்கட்டில் நிற்கவேண்டாம்  உள்ளே வந்து இருக்கையில் வந்து அமருமாறு  நடத்துனர் சிவா எச்சரித்தார்.

அவர் கூறியதை பொருட்படுத்தாத மாணவர்கள் கதிர்வேடு சாலை சிக்னலில்  பஸ் நின்றபோது பஸ்ஸின் மேற்கூரையில்  ஏற முயற்சி செய்தபோது ஓட்டுனரும்  நடத்துனரும் கீழே இறங்குமாறு  சொன்னார்கள். இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் அருகில் இருந்த கற்களால் பஸ்ஸின் பின்பக்கம் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் தப்பித்தால்  அனைவரையும் இறக்கிவிட்டு  இச் சம்பவம்பற்றி  புழல் காவல் நிலையத்தில் ஓட்டுனர் சுயாட்சி  புகார் அளித்தார். இதுகுறித்து  புழல் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து பஸ்ஸின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய கல்லூரி மாணவிகளை வலைவீசி தேடி வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com