வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் விமர்சனம்!

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் விமர்சனம்!

வெளிநாடுகள் செல்வதால் முதலீடுகள் வராது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைகழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு மற்றுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் இறுதியாக  ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார் அப்போது, நேரில் சென்று தொழில் அதிபர்களிடம் கேட்பதால் முதலீடுகள் வராது எனவும், உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழி எனவும் கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக சென்று இருந்த நிலையில், ஆளுநர் மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க:ஒடிசா ரெயில் விபத்து; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!