உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை: இல்லத்தரசிகள் கவலை

36 ஆயிரம் ரூபாயை நெருங்கும் தங்கம் விலையால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை: இல்லத்தரசிகள் கவலை

36 ஆயிரம் ரூபாயை நெருங்கும் தங்கம் விலையால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா இராண்டாம் அலையால் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதும் தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றமடைந்தது.  ரூ.33 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த ஆபரணத்தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தங்கம் விலை உச்சத்தை அடையுமா என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்வதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.4,490க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.35,920க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,900க்கும் விற்பனையாகிறது.