உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று உதகையில் பிறந்த குழந்தைகளுக்கு நகர திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடினர்.

திமுக இளைஞரணி மாநில செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும்,அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் நீலகிரி மாவட்ட திமுகவினரும் இவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாக இன்று உதகை நகர திமுக சார்பில் நகர செயலாளர் எஸ் ஜார்ஜ் தலைமையில் உதகை சேட் மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடப்பட்டது.

மேலும் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இம்மாதம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நகர திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள | திமுக இளைஞரணி செயலாளர் பிறந்தநாள்...! நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்...!