டி-ஷர்டின் உள்பகுதியில் பேஸ்ட் வடிவில் ஒட்டப்பட்டு மறைத்து எடுத்து வந்த ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்....

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

டி-ஷர்டின் உள்பகுதியில் பேஸ்ட் வடிவில் ஒட்டப்பட்டு மறைத்து எடுத்து வந்த ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்....

துபாயில் இருந்து இன்று திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த நபரை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் டிஷர்ட்டுக்குள் பசை போன்ற வடிவில் தங்கம் ஒட்டப்பட்டு மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை  சோதனை செய்து பேஸ்ட் வடிவில் ஒட்டப்பட்டிருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு சுமார் 12.50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைதொடர்ந்து  இரண்டு பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.