தமிழ்நாட்டில் 11% டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை....!!!

தமிழ்நாட்டில் 11% டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை....!!!

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவு நீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.  

10 கோடியே 55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும் ஏற்கனவே 96 கடைகள் குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் கிட்டதட்ட 600 கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்த செந்தில் பாலாஜி இது மொத்தமுள்ள கடைகளில் 11% ஆகும் எனவும் கூறினார். 

அதனை தொடர்ந்து பேசிய அவர் இதன் பிறகு புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை எனவும் இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புதிய கடைகள் திறப்பதாக தவறாக புரிந்து கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  தவறு உறுதி செய்யப்பட்டால்... நடவடிக்கை எடுக்கப்படும்!!