லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசு பஸ்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...

மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசு பஸ்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...
Published on
Updated on
1 min read

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை எட்டு மணி அளவில் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றது. பேருந்து சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஆலாங்கொம்பு என்னும் பகுதி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் உள்ளிட்ட பேருந்தில் பயணம் 8 பேர் காயம் அடைந்தனர். 

இந்த விபத்து குறித்து சிறுமுகை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை இந்த விபத்தின் காரணமாக சிறுமுகை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com